Quantcast
Channel: படலை
Viewing all articles
Browse latest Browse all 501

நாயகிகள்

$
0
0

எங்கள் அலுவகத்தில் இரண்டு நாய்கள் இருக்கின்றன. அல்லது இருக்கிறார்கள். ஒருத்தி பெயர் லூசி. மற்றையவள் கிரேஸ். நிறுவனத்தின் உரிமையாளர்கள் வளர்க்கும் நாய்கள் அவர்கள். இருவருமே அவுஸ்திரேலிய ஷெப்பர்ட் வகை. லூசிக்குப் பத்து வயது ஆகிறது. அனுபவம் நிறைந்தவள். புலோண்ட் முடி. கிரேஸுக்கு இரண்டு வயதுதான். கறுப்பு வெள்ளை. ஒரு இளம் நாய்க்குரிய துடிப்பும் விட்டேற்றியும் பரபரப்பும் அவளிடம் எப்போதுமே குடிகொண்டிருக்கும். 

நான் அந்த அலுவலகத்துக்கு முதன்முதலாக நேர்முகத்தேர்வுக்கு உள்ளே நுழையும்போது லூசியும் கிரேசும்தான் குரைத்தபடி என்னை வரவேற்றார்கள். நேர்முகத்தேர்வுக்கேயுரிய சிறு பதட்டத்தோடுதான் உள்ளே நுழைந்தேன். நாய்கள் குரைத்ததும் “என்னடா ரிசல்ட் இப்பவே வந்துட்டுதா?” என்று சிறு அதிர்ச்சி. பின்னாலேயே வந்த நிறுவன உரிமையாளர் அவ்விருவரையும் அதட்டி, நட்போடு என்னை உள்ளே அழைத்ததும் நிலைமை சுமூகமாகிவிட்டது. இவ்வாறான முதல் அறிமுகங்களின்போது பொதுவாக காலநிலையைத்தான் எடுத்துப்பேசுவதுண்டு. அன்றைக்கு லூசியும் கிரேசியும் பேசுபொருள் ஆனார்கள்.

"டோண்ட் பி ஸ்கெயார்ட். தே ஆர்  குட் டோக்ஸ்"

“ந நா, ஐ ஜஸ்...ட் லவ் டோக்ஸ்!”
மேலும் வாசிக்க »

Viewing all articles
Browse latest Browse all 501