நீண்ட நெடும் பயணம்
அவன் பெயர் சண்டியாகோ. ஒரு சாதாரண ஆட்டிடையன். ஸ்பெயின் நாட்டில் வசிப்பவன். ஒரு ஐம்பது அறுபது ஆடுகளை மேய்த்துக்கொண்டு ஸ்பெயின் நாட்டின் ஊர்களையெல்லாம் சுற்றித் திரிபவன். சின்ன வயது முதலே அவனுக்கு பயணங்கள் செய்வதென்றால் மிகவும் பிடிக்கும். ஆனால் அதற்குப் பணம் வேண்டுமே? ‘ஆடு மேய்க்கிறவன்தான் ஊரெல்லாம் திரிவான்’ என்று தந்தை ஒருநாள் நக்கலாகச் சொன்னதை இவன் சீரியசாகவே எடுத்துவிட்டான். அதுவரைக்கும் ஒரு கிறித்துவ பள்ளியில் படித்துக்கொண்டிருந்த்தவன், படிப்பை அப்படியே தூக்கிப் போட்டுவிட்டு மேய்ப்பதற்கு வந்துவிட்டான்.
ஆடுகள் பெரிதாக எந்த அலுப்பும் கொடுக்காத ஜீவன்கள். அதுகளின் தேவை இரண்டே இரண்டுதான். ஒன்று புல்லு. மற்றது தண்ணீர். வேறு எதற்குமே அவை அலட்டிக்கொள்ளாது. அவற்றின் உணவுக்காக இவன் மேய்ச்சல் நிலங்களைத்தேடி காடு தேசமெல்லாம் அலைவான். காலம் வந்தவுடன் நகர்ப்புறத்துக்கு வந்து கம்பளி விற்பான். கூடவே இன்னொரு வேலையும் செய்வான். அவனிடத்தில் எப்போதுமே ஒரு புத்தகம் இருக்கும். நகரத்தில் அவன் அதைக் கொடுத்துவிட்டு புதிதாக இன்னொரு புத்தகத்தை வாங்குவான். தூரப் பயணம் என்றால் கொஞ்சம் மொத்தமான புத்தகம். நகரத்துக்கண்மையில் மேய்ச்சல் என்றால் சின்னப்புத்தகம்.
ஒருநாள் அவனுக்கு ஒரு கனவு வருகிறது.
மேலும் வாசிக்க »"உனக்கு ஒரு புதையல் கிடைக்கப்போகிறது"