91ம் ஆண்டு.
தீபாவளிக்கு இன்னமும் ஒரு மாதமே இருக்கிறது. அப்போது ரஜினி “காலம் மாறிப்போச்சு” என்று ஒரு படம் நடித்துக்கொண்டிருக்கிறார். ஏதோ ஒரு காரணத்தால் படத்தைத் தொடர முடியவில்லை. தீபாவளி நெருங்குகிறது. “தலீவா உன் படம் வேணும்” என்று ரசிகர்கள் ரஜினி வீட்டுக்கு முன்னால் நின்று ஆர்ப்பாட்டமே செய்கிறார்கள். ரஜினி உடனேயே கன்னடப் படமான தேவா கதையை ரீமேக் பண்ண முடிவெடுத்து ராஜசேகரை இயக்குனராகப் போட்டு நடிக்கிறார். வழமையான, தம்பிமாருக்கு உருகும் அண்ணன், அந்தத் தம்பிமாராலேயே ஏமாற்றப்பட்டு, எல்லாவற்றையும் இழந்து, பின் மீள எழும் டெம்ப்ளேட் கதை. “மாசி மாசம் ஆளான பொண்ணு”, “சந்தைக்கு வந்த கிளி” என்று பல இளையராஜா ஹிட்டுகள். ஒரே மாதத்தில் மொத்தப்படமும் எடுக்கப்பட்டு தீபாவளியன்று படம் வெளியாகிறது. தர்மதுரை! அந்தப்படம் ரஜனி ரசிகர்களுக்கு செம மீல்ஸ். மற்றவர்களுக்கு சாதாரணம்.
லிங்கா, ரஜனி நமக்குத் தந்திருக்கும் இன்னொரு தர்மதுரை.
மேலும் வாசிக்க »