இறுதிப்பாகம்
உலகத்தின் எந்த வரலாற்றை எடுத்துக்கொண்டாலும், எல்லா இருண்டகாலங்களுக்கும் பின்னே பொற்காலங்கள் தோன்றியிருக்கும். எல்லாப் பொற்காலங்களுக்கும் பின்னே மீண்டும் இருண்ட காலங்கள் தோன்றியிருக்கும். இன்னுஞ் சொல்லப்போனால் பொற்காலங்களின் இருப்பை அதற்குப் பின்னரான இருண்ட காலங்களும், இருண்ட காலங்களின் இருப்பை அதற்கு முன்னரான பொற்காலங்களுமே எமக்கு உணர்த்தி நிற்கும். ஆனால் மிக மிக அரிதாகவே வரலாற்றின் சில காலப்பகுதிகளை எம்மால் அப்படி எடைபோட முடிவதில்லை.
வரலாற்றின் இந்த நியதிக்கு எங்கள் குச்சு ஒழுங்கை மட்டும் விதிவிலக்கா என்ன?