Quantcast
Channel: படலை
Viewing all articles
Browse latest Browse all 501

என் கொல்லைப்புறத்துக் காதலிகள் : 2. கடவுள்

$
0
0

 


நித்தியகல்யாணியில்தேடித்தேடிப்பூஆயும்அதிகாலை. மதிலுக்குமேலாகவளர்ந்துநிற்கும்மரக்கொப்பை, ஆட்டுக்குக்குழைகுத்தும்கம்பியால்எட்டிப்பிடித்து, கொளுவிவளைக்கும்போது, சொட்டுச்சொட்டாககொஞ்சம்பனித்துளி, தலை, முகம், கழுத்தடிஎல்லாம்விழுந்துஉடம்புசில்லிடும். திருவிழாவில்வாங்கியசின்னப்பனைஒலைப்பெட்டியில், மொட்டுத்தவிர்த்து, பூக்களைப்பிடுங்கிப்போட்டவாறுசெவ்வரத்தைக்குத்தாவுகிறேன். ஒரேமரத்தில்எத்தனைவகைப்பூக்கள்?அதில்ஐந்தாறைமடக்மடக்கென்றுஒடித்துப்போடுகிறேன். தோட்டத்தில்நின்றகனகாம்பரம், ரோசா, கடதாசிப்பூமரங்களில்கைவைப்பதில்லை. பேப்பர்பூசாமிக்குவைக்கக்கூடாது. கனகாம்பரம்கலியாணவீடு, சாமத்தியவீடுஏதும்வந்தால்கொண்டைக்குத்தேவை. ரோசாப்பூவைப்பிடுங்கினால்அம்மாதிட்டுவார். அதுவிசிட்டர்ஸ்வந்தால்மணிக்கணக்கில்போறாமைப்படுவதற்கு. பொறாமைப்படுவார்கள்.

எப்பிடிஉங்கடமண்ணிலமட்டும்ரோஸ்நல்லாவளருது?

அதுதியத்தலாவையில்இருந்துஸ்பெசலாக்கொண்டுவந்தது. எங்கடகிணத்துத்தண்ணிக்குகடகடவெண்டுவளந்திடும்

பதிவச்சுத்தாறீங்களா?

கற்றைகற்றையாய்ப்பூத்துத்தொங்கும்மஞ்சள்கோன்பூக்களில்கொஞ்சத்தைஇழுத்துப்போட்டுக்கொண்டேபின்வளவுக்குச்சென்றால், அங்கேஎக்ஸ்சோராமரங்கள். மஞ்சள், சிவப்பு, வெள்ளை, பட்டர்கலர்என்றுபலரகம். கொத்தைஅப்படியேஅள்ளி, அம்மாசெக்பண்ணுகிறாராஎன்றுபார்த்து, இல்லைஎன்றால்அந்தச்சின்னச்சின்னஸ்ட்ரோக்களில்தேனைஉறிஞ்சி; தேன்எனும்போதுதான்ஞாபகம்வருகிறது. வாழைமரங்கள்உள்ளவீட்டுக்காரராநீங்கள்?அப்படிஎன்றால்வாழைப்பொத்திகளில்தேன்குடிக்காமல்விட்டிருக்கமாட்டீர்கள். காலையில்அணில்பிள்ளைகள்வரும்முன்னரேயேதோட்டத்துக்குப்போய்பொத்திகளில்உதிராமல்இருக்கும்பூஇதழ்களைஒவ்வொன்றாகக்கொய்து, அதில்சொட்டுசொட்டாய்ஒட்டியிருக்கும்தேனினைக்குடிக்கவேண்டுமே. சாதுவாகவாழைக்கயரும்சேர்ந்துகொடுக்கும்அந்தத்தேனின்சுவை, ‘தினைதனைஉள்ளதோர்பூவினில்தேன்உண்ணாதேஎன்றமாணிக்கவாசகர்வரிகளைஞாபகப்படுத்தும். 

கோத்தும்பிஇப்போதுதேனினைச்சொரிந்துபுறம்புறத்திரிந்தசெல்வத்தைத்தேடிசுவாமிஅறைக்குள்நுழைகிறது. 

சாமியறைத்தட்டு. 

பிள்ளையார், முருகன், இலட்சுமி, சரஸ்வதி, நயினைநாகபூசணி, குட்டியாகச்சிவலிங்கம், மன்னார்அன்ரிதந்தமடுமாதாசிலை, வீட்டுகுடிபூரலுக்குநமசிவாயம்குடும்பத்தார்உபயம்செய்தசரவணபவன், பிருந்தாவனத்துக்கிருஷ்ணன், சின்னஇயேசு, சிவனேஎன்றுஒருபுத்தர். இப்படியேதட்டுபூராகக்கடவுள்கள்பழையஉதயன்பேப்பருக்குமேலேவீற்றிருப்பார்கள். பின்பக்கம்கரப்பான்பூச்சிகள்ஓடும். ஆங்காங்கேபூச்சிஉருண்டைகள். சிந்தியவீபூதி. எப்போதோசெய்தகாய்ந்துபோனஅர்ச்சனைவெற்றிலைகள். தோத்திரபாடல்தொகுப்புகள். எல்லாமேபடங்களுக்குமுன்னேஇரைந்துகிடக்கும். நவராத்திரி, பொங்கல், வருடப்பிறப்புஎன்றால்மட்டும்கடவுள்கள்துப்புரவாக்கப்படுவார்கள். புதுக்கோலம்கிடைக்கும்.  ஸ்பெசலாகஇலட்சுமி, முருகன், பிள்ளையார்படங்களுக்குமேலேவண்ணவண்ணபல்புகள்எரியும்.எங்கள்வீடுஎன்றில்லை. யாழ்ப்பாணத்தின்அநேகமானவீடுகளில்இப்படிக்கடவுள்கள்பல்புவாங்கிக்கொண்டிருந்தார்கள்.

சாமித்தட்டிலும்யாருக்குப்பூவைப்பதுஎன்பதில்முன்னுரிமைஇருக்கிறது. குடிபூரலுக்குஉள்ளேவந்தகடவுள்கள்தான்முதல்குடியேறிகள். அவர்களுக்குச்செவ்வரத்தைவேண்டும். பெரியபிள்ளையாருக்குச்செவ்வரத்தைகிடைத்தால்சின்னப்பிள்ளையார்பாவம்அன்றைக்குஅவருக்குவெறும்நித்தியகல்யாணிதான். ஒரேகடவுளுக்குஇரண்டுபெரியபூக்களைக்கொடுக்கமுடியாது. கணக்குவழக்குஇல்லாமல்எல்லாப்பூக்களையும்கியூவில்முன்னுக்குநிற்கும்கடவுள்களுக்குக்கொடுத்துவிட்டால்வரிசையில்பின்னுக்குநிற்கும்குட்டிமரியாளுக்குஒரேயொருஎக்சோராபூவிதழைச்சிவலிங்கத்திடமிருந்துபிய்த்துக்கொடுப்பேன். பவரைக்காட்டினால்தான்கடவுளுக்குக்கூடபூகிடைக்கும். கன்னத்தைக்காட்டினால்?இயேசுக்குவெறும்நித்தியகல்யாணிஇலையேஎஞ்சும். புத்தருக்குஅதுவும்இல்லை.  கச்சாமி.

எங்கள்சின்னம்மாஒருமுறைதஞ்சாவூருக்குப்போய்வந்தபோதுகுட்டிபிள்ளையார்சிலைஒன்றைவாங்கிவந்தார். முழுக்கமுழுக்கச்சந்தனத்தாலானசிலைஅது. திறந்துவைத்தால்வாசம்போய்விடும்என்றுஒருபிளாஸ்டிக்டப்பாவுக்குள்அவரைவைத்திருந்தோம். அவ்வப்போதுகொஞ்சமாகமூடியைத்திறந்துபிள்ளையாரைமுகர்ந்துபார்ப்பதுண்டு. அந்தவாசத்துக்காகவேஅவருக்குஒருஸ்பெசல்மஞ்சள்கோன்பூஒன்றைத்தலையில்வைப்பேன். 

தொப்பிவாங்கியபிள்ளையார்.


*****

 

பள்ளிக்கூடத்தில்தவணைப்பரீட்சைவருகிறதுஎன்றால்கடவுள்பயம்பயங்கரமாகவந்துவிடும். புத்தருக்குக்கூடசெவ்வரத்தைகிடைக்கும். முதல்நாள்பரீட்சைதமிழ்’. அதில்ஓரளவுக்குநன்றாகச்செய்துவிட்டால்அடுத்தடுத்தபரீட்சைஎல்லாம்அதேசப்பாத்து, அதேசொக்ஸ், பெனியன், ஷர்ட், ஷோர்ட்ஸ்எல்லாமே. பெண்டரைக்கூடமாற்றுவதில்லை. மாற்றினால்பரீட்சைபேப்பர்கடினமாகிவிடும். 

இதிலேஎனக்கென்றுதனிப்பட்டவியாதியொன்றும்இருந்தது. வீட்டிலிருந்துகேற்றுக்குநடந்துபோய்க்கொண்டுஇருப்பேன். அப்போதுபார்த்துமனதில்கடவுள்தடுத்தாட்கொள்வார். 

டேய்குமரன், இன்றைக்குச்சரியாகஐந்தாவதாகஇருக்கும்குட்டிசிவலிங்கத்தைத்தொட்டுக்கும்பிடமறந்துவிட்டாய். நீஒழுங்காகவெளிப்படைஉண்மைநிறுவலும்படிக்கவில்லை. தப்பித்தவறிகஷ்டமானகேள்வியாகவந்துவிட்டால்? 

என்னடாஇதுவில்லங்கம்என்றுவிறுவிறுவெனமீண்டும்சப்பாத்து, சொக்ஸ்எல்லாம்கழட்டி, சாமியறைக்குள்ளேபோய், அந்தச்சிவலிங்கத்தைக்கும்பிட்டுவிட்டுத்திரும்புகையில்ஏனையகடவுள்களைக்கண்டும்காணாமல்போவதைமனம்கேளாது. மீண்டும்ஆரம்பத்தில்இருந்துபிள்ளையாரப்பா, லட்சுமிதேவியே, முருகப்பெருமானே, வள்ளிதெய்வானையே, எலியே, சேவலே, நாகபூசணிஅம்மாளே, ஐந்துதலைநாகமே, சிவலிங்கபெருமானே, கங்காதேவியே, இராவணா, இராவணா, இராவணா, இராவணா, இராவணா, இராவணா, இராவணா, இராவணா, இராவணா’.

அப்பாடிஇப்போதுதான்நிம்மதிஎன்றுசாமியறைக்குவெளியேவரும்போது, அடடாஒன்பதுஇராவணன்தலைகளைத்தானேஎண்ணினோம். பத்தாவதுஎங்கே?ஆகாஅதைத்தானேகொய்துவீணைவாசிக்கிறார்தலைவர். அதைவிடமுடியாதே. மீண்டும்சாமியறைவிரைந்து, ‘இராவணா ...’ எண்ணிமுடித்து, ஆரம்பத்தில்இருந்துமீண்டும்கும்பிடத்தொடங்க, 

டேய்வெளிக்கிடுடா, விழுந்துவிழுந்துகும்பிட்டாச்சரியாயிடுமா?ஒழுங்காபடிச்சல்லோஇருக்கோணும்?

அக்காதிட்டத்தொடங்குவாள். வெளியேவந்துசைக்கிள்எடுக்கவும், கீர்த்திமுழிவியலமாய்வந்துநிற்பான். நெற்றிமுழுதும்பட்டையும்பத்துசந்தனபொட்டும்ஒன்றின்மேல்ஒன்றாகஇருக்க, அண்ணரின்வீட்டிலும்ஒன்றுக்குரெண்டாகஇராவணன்படம்இருப்பதுவிளங்கும்.

இப்போதுபரீட்சைக்குப்போகும்வழி. வழிமுழுக்கக்கோதாரிபிடிச்சயாழ்ப்பாணத்தார்கோயில்கோயிலாகக்கட்டிவைத்திருக்கஎங்கள்பாடுதான்திண்டாட்டம். ஸ்டார்ட்டிங்பொயிண்ட்நேர்சிங்கோம் பிள்ளையார்கோயிலடி. வலுவிசேசமானகோயில். எங்கள்வீடுஎந்தபொம்மர், ஷெல்அடிக்கும்ஆடாமல்அசையாமல்நின்றதுக்குஅந்தப்பிள்ளையார்தான்மெயின்காரணம்என்றுஎங்கள்குடும்பத்தில்ஒருஅலாதிநம்பிக்கை. ஒன்றுக்குமூன்றுமுறைசுற்றிவிட்டுக்கையில்இருந்தஐம்பதுசதத்தைஉண்டியலில்போடும்போதுஒருநம்பிக்கைவந்தது. வெளியேவந்துசப்பாத்துபோடும்போதுகீர்த்தியிடம்கேட்டேன். 

எவ்வளவடாஉண்டியலிலபோட்டாய்?
        
ஒரூவா ... நீ?
        
ரெண்டுரூவாடா”’



 வழியில்சிவன்அம்மன்கோயிலில்சைன்வைத்துவிட்டுநல்லூருக்குப்போகிறோம். இறங்கிஉள்ளேபோய்கோபுரவாசலில்மண்ணைத்தட்டிவிட்டுவிழுந்துஅஷ்டாங்கநமஸ்காரம்செய்கிறேன். ‘ஸ்ரீகணநாதாகழல்தொழுதேன்அடியேனா..’ என்றகீதம்நிச்சயம்மூன்றுமுறைநல்லூர்முருகன்சந்நிதானத்தில்பாடுவேன். முருகன்கோயிலில்எதற்குப்பிள்ளையார்பாட்டுஎன்றுஒருடவுட்வரலாம். இந்தப்பாட்டுகேட்டுவிட்டுப்போனதாலேயேஐந்தாம்வகுப்புஸ்கொலர்ஷிப்எக்ஸாம்பாஸ்பண்ணினேன். அதிலிருந்துஎந்தஎக்ஸாம்என்றாலும்ஸ்ரீகணநாதாதான். டிரைவிங்டெஸ்ட்உட்பட.

சுற்றிக்கொண்டுகோயில்வீதிபிடித்து, கைலாயபிள்ளையார்கோயிலில்கும்பிட்டு, நாவலர்வீதிதாண்டினால்இனிதேவாலயங்கள்அமையப்பெற்றபகுதி. ஒருவேளைஇயேசுதான்உண்மையானகடவுளாகஇருந்துவிட்டால்?சந்தேகம்வலுக்க, ஒவ்வொருதேவாலயமாகஏறிஇறங்கி, சரியாகத்தெரியாதசிலுவைக்குறியைச்சைகைசெய்துவணங்கி, சிலமுக்கியத்துவம் குறைந்தவைரவர், பெண்டிக்கொஸ்தே, கோபுரம்இல்லாதகுட்டிஆலமரத்தடிகோயில்கள்இடையிடையேவந்தால்இறங்கிஉள்ளேபோகாமல்சைக்கிள்பெடலில்ஸ்டாண்டிங்கில்நின்றுவணங்கி, சென்ஜோன்சுக்குபோகவும், மணிஅடிக்கவும்சரியாகஇருக்கும். 

நல்லசகுனம்.

இன்றைக்குஎன்னுடையபதின்மவயதுகடவுள்பக்தியைமீட்டிப்பார்த்தால்ஆச்சரியமாகஇருக்கிறது. கடவுள்மேல்பக்தியாபயமாஎன்றால்பயம்தான்அதிகம். அதேநேரம்முறைப்பாடுகளுக்கும்பஞ்சமில்லை. அம்மாஏசினால், அப்பாகம்பெடுத்தால்எனக்கேன்இப்படிஒருஅம்மாஅப்பாவைத்தந்தாய்தெய்வமே?என்பதுமுதல், வானதிஅக்காஆனையிறவுஅடிபாட்டில்இறந்தசெய்திகேட்டு, ‘ஏன்சோதிஅக்காவைஇப்படிக்கொன்றுபோட்டாய்?எனஎத்தனைபுலம்பல்கள். கதிரைக்கால்முதிரைமரம், தெரியாமல்முழங்காலில்பட்டால்உடனேதிட்டுவதும்கடவுளைத்தான். .எல்பரீட்சைப்பெறுபேறுகிடைத்தபோதுஒருநல்லமுடியுள்ளதேங்காயைஅம்மாஎன்கையில்தந்து, 


ஓடிப்போய்பிள்ளையாருக்குஉடைச்சிட்டுவா, உன்னைக்குழப்பாமப்படிப்பிச்சவர்அவர்தான்

*****

 தொண்ணூறாம்ஆண்டுஇருக்கும்என்றுநினைக்கிறேன். நாச்சிமார்கோயிலில்சரஸ்வதிபூசை. அக்காமாரின்இசைநிகழ்ச்சி. எல்லோரும்ஹாஃப்சாரியில், பின்னால்கனகாம்பரசடைவைத்து, சாரிக்குப்போர்ச்குத்தி, கோயில்மண்டபத்தில்உட்கார்ந்துபாடுகிறார்கள்.

வெள்ளைத்தாமரையில்வீற்றிருப்பாய்
எங்கள்உள்ளக்கோவிலிலேஉறைந்துநிற்பாய்
கள்ளமில்லாமல்தொழும்அன்பருக்கேஎன்றும்
அள்ளிஅறிவைத்தரும்அன்னையும்நீ...”

என்றுமெலடியாகத்தொடங்கி, 

அருள்வாய்நீ... இசைதரவாநீ...
இங்குவருவாய்நீ... லயம்தரும்வேணி
அம்மா...”

முடிக்கும்இடத்தில்உச்சஸ்தாயியைஎட்டமுடியாமல்திணறி, மூக்குபிய்ந்து, சுருதிபிசகி, சங்கீதடீச்சர்முறைத்ததுதெரியாமல்நாங்கள்எல்லாம்கைதட்டிகோயில்சார்ந்தகலாச்சாரத்தில்தான்எத்தனைஇனிமை. கடவுள்மீதுஎனக்குஇருந்தஒருவிதஈர்ப்புக்குமுக்கியகாரணம்தேவாரஇசையும்எங்கள்ஊர்க்கோவில்களும்தான். அத்தனைதேவாரங்களிலும்அருமையானமெட்டுகள். ‘மீளாஅடிமைஉமக்கேஆளாய்பிறரைவேண்டாதேஎன்பதைஒருமுறைகண்கள்மூடிசந்திரமௌலீசன்சேர்வகுப்பில்பாடியபோதுஎன்னைஅறியாமல்கண்கலங்கியது. 

ஆளாயிருக்கும்அடியார்தங்கள்
அல்லல்சொன்னக்கால்,
வாளாங்கிருப்பீர்திருவாரூரில்,
வாழ்ந்துபோதீரே

கடவுளைச்சுந்தரர்கையாண்டவிதம்ஆச்சரியமானது. ‘இவ்வளவுசொல்லியும்பேசாமல்இருந்தால்என்னமனுசன்நீ. எக்கேடுகெட்டும்போஎன்றுகடவுளையேநொந்துகொள்கிறார்சுந்தரர்.

சீசீஇவையும்சிலவோவிளையாடி
ஏசும்இடம்ஈதோவிண்ணோர்கள்ஏத்துதற்குக்
கூசும்மலர்ப்பாதம்தந்தருளவந்தருளும்

என்றுதிருவெம்பாவையில்எள்ளிநகையாடும்விளையாட்டைஇறைவன்பெயரில்செய்யும்துணிச்சல். இன்னும்கொஞ்சம்ஆழ்வார்பாடல்களில்இருக்கும்போர்னோகிராபியைப்பார்த்தால்ஆச்சரியம்விரியும். இறைவனைக்காதலுடனும், ஊடலுடனும், கூடலுடனும்பார்த்தமதம்எங்களது. நம்முன்னோர்களின்இந்தலிபரல்அணுகுமுறைஇன்றைக்குஇல்லை. இறைவனைஅப்படிஎழுதமுடியுமா?ஆண்டாள்காதல்எல்லாம்முடியுமா?மொட்டைஅடிச்சுக்கரும்புள்ளி, செம்புள்ளிகுத்திவிடுவார்கள்.  

இடம்பெயர்ந்துவட்டக்கச்சியில்வசிக்கும்காலம். புளியம்பொக்கணைதிருவிழாஆரம்பிக்கிறது. அக்கம்பக்கத்தில்இருப்பவர்எல்லாம், புளிச்சோறுசெய்து, மோர்ப்பந்தலுக்குரியபொருட்கள், நேர்த்திக்கடாக்கள், சேவல்கள்ரெடிபண்ணுவார்கள். பெண்கள்அனைவரும்காஞ்சிபுரம், பாவாடை, சட்டை, ஆண்கள்புதுச்சாறம், சேர்ட்அணிந்து, மேலிரண்டுபட்டன்கள்போடாமல்வெளிக்கிட்டுவெளியேவந்தால், வீதியில்ஐந்தாறுட்ரக்டர்கள்வரிசையாய்நிற்கும். வட்டக்கச்சியில்இருந்துபுளியம்பொக்கணைஒருமணித்தியாலஓட்டம். இடையிடையேபுளிச்சாதம். ஆளுக்குஆள்அடிக்கும்நக்கல்கள். சத்தம்போடாமல்செய்யும்காதல். கோயிலைச்சென்றடைந்தவுடன்பெண்கள்பொங்கலுக்குஅடுப்புதயார்செய்வார்கள். ஆண்கள்மோர்ப்பந்தல்சரிக்கட்டுவோம். வேள்விச்சேவல்கள்மதியநேரத்திலும்கூவிக்கொண்டிருக்கும். ஆட்டுக்கிடாய்கள்மிரண்டுபோய்க்கத்தும். போனகடனுக்குஅம்மாளைக்கும்பிட்டுவிட்டு, கோயில்பிரகாரத்தில்நாங்கள்அடிக்கும்பம்பல். திருவிழாமுடிந்துவேள்விமிருகங்களைப்போடும்ஏலம். கிராமத்துக்கடவுள்களுக்கும்மனிதர்களுக்குமானஇடைவெளிமிகக்குறைவு. அவர்களின்பக்தியும்புரிந்துணர்வும்மிகஎளிமையானது. வாழும்வாழ்க்கையோடுபிணைந்திருப்பது. வாழ்ந்துபார்த்தாலேயேவிளங்கக்கூடியது.

அடுத்தபுளியம்பொக்கணைதிருவிழாவுக்குவண்டிகட்டிப்போகவேண்டும்.

நயினாதீவில்எங்கள்வீட்டிலிருந்துகூப்பிடுதூரத்தில்ஒருகடற்கரைப்பிடாரிகோயில்இருக்கிறது. புழுதியும்கடல்காற்றும்மாலைஆறுமணிக்குமேலேகாதோரங்களில்பலகதைகள்சொல்லும். அந்தக்காற்றில்கோயில்நாதஸ்வரம்ஒருவிதஸ்ஸ்ஸ்சத்தத்துடன்இசைக்கவும், வீட்டிலிருந்துவெறும்காலுடன்நடக்கஆரம்பிப்போம். போகும்வழியில்பூவரசுமரத்தில்பீபீசெய்து, நான்கானமூர்த்தி, மச்சான்பஞ்சமூர்த்தி, இன்னொருமச்சான்தவில்தட்சணாமூர்த்தி, வாசித்துக்கொண்டேகோயிலுக்குப்போவோம்.  பீபீயிலிருந்துஎச்சில்வழியும். சாமிவெளியேவருவார். வடைமாலைசாத்தப்படும். வரிசையாகஅடுப்புகளில்பொங்கல்பானைகள்பிடாரிஅம்மனுக்காகக்காத்திருக்கும். தீமிதிப்பார்கள். சிலரவுண்காரர்குடுகுடுவென்றுஅரக்கப்பறக்கத்தீக்கனல்மேலேஓடுவார்கள். பூசைமுடியச்சுண்டலும், பூவரசுஇலையில்தரும்புக்கையும், ஐயர்வீட்டுமோதகமும்கோயிலடியில்வைத்துச்சாப்பிட்டுவிட்டுநள்ளிரவுதாண்டிவீடு திரும்புவோம். 

பிடாரிகோயிலுக்கும்போகவேண்டும்.

 *****


பதினேழுவயசுவரைக்கும்கடவுள்பாசத்துக்குக்குறைவில்லை. அப்புறமாகக்கம்யூனிஸ்டாகமாறும்பருவம்என்றுசொல்வார்கள். எனக்குஎப்படிஅதுநிகழ்ந்தது? ‘இருவர்என்றுநினைக்கிறேன். வவுனியாநெலுக்குளம்அகதிமுகாமில்இருக்கும்போதுதான்இருவர்வெளியானது. தமிழ்நாட்டில்சுதந்திரப்போராட்டக்காலம், அதன்பின்னரானஅரசியல்சுவாரசியம்என்னையும்பிடித்துக்கொள்ள, யாழ்ப்பாணம்திரும்பிவந்தபின்னர்தொடர்ந்துஅந்தவரலாற்றையேத்தேடித்தேடிப்படித்தேன். இந்தியாவில்படித்தசுந்தரம்பிள்ளைஅங்கிளைஅரித்துஅரித்துக்கேட்டதில்பெரியார்பற்றிநிறையவேஅறியமுடிந்தது. திராவிடக்கழகத்தின்எழுச்சி, கடவுள்மறுப்பு, பகுத்தறிவுவாதம், கொஞ்சம்கொஞ்சமாகஅந்தக்கருத்துகளில்இருந்தஜனரஞ்சகத்தன்மைஎன்னைக்கவரத்தொடங்கியது.

பெரியார். 

எனக்குமுன்னம்பின்னம்தெரியாதநபர். எனக்கென்றில்லை, எங்கள்ஊரிலேயேபெரிதாகஅறியப்படாதவர். யாழ்ப்பாணத்தில்திட்டமிட்டபெரியார்இருட்டடிப்புநிகழ்ந்திருக்கிறதுஎன்பதைஇப்போதுயாரும்நம்புவதில்லை. எம்ஜிஆருக்குரசிகர்மன்றம்இருந்தது. காந்திஜிஇயக்கம்ஒன்றுகூடகொழும்பில்இருந்தது. பெரியாரைச்சீண்டுவாரில்லை. காரணம்தங்கள்இருப்புக்குமோசம்வந்துவிடுமோஎன்றகவலைதான். ஈழத்துத்தலைவர்கள்பெரியாருடன்தொடர்பில்இருந்தாலும், அதுஒருவிதராஜதந்திரரீதியானதொடர்புகளேஒழியப்பெரியாரின்கொள்கைகள்பால்கொண்டபற்றில்இல்லை. அதற்குப்பெரியாரின்பார்ப்பனியஎதிர்ப்பும்ஒருகாரணமாகஇருந்திருக்கலாம். பார்ப்பனியஎதிர்ப்பின்தேவைஈழத்தில்பெரிதாகஇருக்கவில்லை. பெரியார்கொள்கைகளைத்தேவையாகக்கொண்டசமுதாயத்துக்குப்பெரியார்என்றஒருவர்இருந்ததேதெரியாது. தெரிவிக்கவும்ஆள்இல்லை. கூடவேஎல்லோருக்குமானபொதுஎதிரிஇருந்ததால்சமூகத்துக்குள்ஒருவிடுதலைஎன்றஎண்ணத்துக்குஎவருமேவரத்தலைப்படவில்லை.

இப்படியானசூழ்நிலையில்ஒருதெளிவில்லாதபகுத்தறிவுவாதம்எனக்குள்உருவாகிறது. செலக்டிவ்பகுத்தறிவு. தேவைக்குக்கடவுள். பரீட்சைஎன்றால்இயல்பாகவரும்superstitiousஎண்ணங்களைஎன்பகுத்தறிவால்மேவமுடியவில்லை. ஒருசிவப்புத்தொப்பியைஇருபதுவருடங்களாகவைத்திருந்தஆள்நான். என்பேர்சுக்குள்காசுஇல்லாமல்போனாலும்வெண்ணெய்தின்னும்கண்ணன்எப்போதும்இருப்பான். இடம்பெயரும்போதுகூடச்சேர்ந்துஇருந்தவன். ஆர்மிக்கு.சிகாட்டும்போதுஅவனும்என்னோடுசேர்ந்துபல்லிளிப்பான். ஆபத்பாந்தவன். இன்றைக்கும்என்னோடுஇருக்கிறான். நான்குமூலையிலும்பிய்ந்துஉக்கியதொண்ணூற்றிரண்டாம்ஆண்டுகலண்டர். ஏனோஎறிந்துவிடமனம்வரவில்லை. காஸ்ட்எவே(Cast Away)படத்தின்நாயகன்ஒருவொலிபோலைஎப்போதும்துணைக்குவைத்திருப்பார்இல்லையா. அந்தப்பந்துக்குவில்கின்சன்என்றுபெயர்வைத்து, முடிவைத்து, முகம்வைத்து, அதுநீரில்தத்தளிக்கும்போதுபோய்க்காப்பாற்றி... அவனுக்குஅந்தப்பந்துதான்ஒரேபிடிமானம். என்கண்ணன்படமும்அப்படியே. ‘பயப்படாதேநான்இருக்கிறேன்என்றுசொல்கின்றஒருபிடிமானம்.  

ஹர்ஷாஎன்கின்றசிங்களநண்பரோடுஒருமுறைஓஷோபற்றிவிவாதிக்கச்சந்தர்ப்பம்கிடைத்தது . ‘கடவுள்என்றுஒன்றில்லை, அதுநீயும்நீவாழும்வாழ்க்கையுந்தான்என்றஓஷோவின்தளம்தான்எங்கள்விவாதப்பொருள். பிரபஞ்சம்எப்படித்தோன்றியதுஎன்றுநான்கேட்க, அதுஏன்தோன்றியிருக்கவேண்டும்என்றுநினைக்கிறாய்எனஹர்ஷாதிருப்பிக்கேட்டபோதுதிக்என்றது. அதுதானே?ஒன்றுஏன்எப்போதுமேஇன்னொன்றில்இருந்துஆரம்பிக்கவேண்டும்?எங்களுக்குஎந்தப்பொருளுக்குமேஆதியும்அந்தமும்இருக்கவேண்டும். அதுஇல்லாததுஅருட்பெரும்சோதியாகிறது. எல்லாமேகாரணகாரியங்களுடன்நடக்கிறதுஎன்பதுஇன்னொருஎண்ணப்பாடு. இயற்கைஏன்முடிவில்லாமலேயேஇருக்கக்கூடாது?அந்தமுடிவில்லாஇயற்கையின்ஒருசேர்மானம்தான்நான். இன்னொருசேர்மானம்நீங்கள். இந்தசெதனக்கலவையின்ஆச்சரியமேயோசிக்கும்ஆற்றல்தான். நான்ஏன்இயக்கப்படவேண்டும்?இயல்பானதாகவேஇருக்கமுடியாதா?எண்ணற்றஅனிச்சைச்செயல்களின்வண்ணத்துப்பூச்சிவிளைவின்நீட்சிதானேநான்?அபூர்வமானஇந்தக்கூறுகள்தங்களுடையஇருப்புக்காக, யுகம்யுகமாய்க்கூர்ப்படைந்து, திரிந்துஉயிரிகளாகமாறியிருப்பதைஅறிந்துகொள்ளும்ஆற்றல்எங்களுக்குஇருக்கிறதா?என்னைக்கேட்டால்இல்லைஎன்றேசொல்வேன். எங்கள்அறிவுக்குஓரளவுசிந்திக்கலாம். அதிகமாகச்சிந்திக்கமூளையின்சிந்தெடிக்பவர்போதாது. கேவலம்பால்வீதிக்குள்ளேயேகுதிரைஓட்டமுடியாதஅற்பப்பதர்கள்நாங்கள். அணுவுக்குள்இருப்பனவற்றையேஅறியமுடியாமல்திகைப்பவர்கள். குவாண்டம்என்டாங்கில்மெண்ட்போன்றவிஞ்ஞானஆச்சரியங்களைஎங்கள்பௌதீகவியல்விதிகளுக்குள்இன்னமுமேஅடக்கமுடியவில்லை. 

ஒருகட்டத்தில்இப்படியெல்லாம்எதற்குச்சிந்தித்துமுறியவேண்டும்என்றுயோசித்து, சிந்தனைக்குஅப்பாற்பட்டசக்தியைஇறைவன்என்றுபெயர்சூட்டிஇலகுவாக்கிவிட்டோம். x=1க்குநிறுவி, பின்x=nக்குஉண்மைஎன்றால்x=n+1க்கும்உண்மைஎன்றுமுடிவுபண்ணி, உயிரியல்அமைப்புக்குஒருவரைவிலக்கணம்கொடுக்கும்பேதைத்தனம். கணிதத்தில்எட்டாஇடத்தைமுடிவிலிஎன்றுசொல்லிகேஸ்க்ளோஸ்பண்ணுவதுபோலத்தான்இதுவும். முடிவிலிக்குஆஸ்திகம்கொடுக்கும்பெயர்தான்கடவுள்.  

பைஃட்கிளப்என்றஆங்கிலப்படத்தில்வரும்வசனம்இது. 

Listen up, maggots. You are not special. You are not a beautiful or unique snowflake. You're the same decaying organic matter as everything else

இதுபுரிந்தால்வாழ்க்கைஇலகுவாகிறது. இறப்புக்குப்பின்என்றுஎதுவுமேஇல்லை. நான்என்றவிசயம்இங்கேயேதொடங்கிஇங்கேயேமுடிகிறது. இறப்பின்போதுநான்என்றசேர்மானம்சுக்குநூறாகஉடைய, அதற்குப்பிறகுஎதுவுமேஇல்லைஎன்றுஆகிறது. எதுவுமே. என்னோடுஉயிர்வாழ்ந்தமற்றையநான்களின்ஞாபகங்களில்நான்இருக்கப்போகிறேன். அவ்வளவுதான். அதுஎனக்குஎந்தவிதத்தாக்கத்தையும்ஏற்படுத்தாது. Because I am gone, just gone. 

எங்கேயோவாசித்ததுஞாபகம்வருகிறது. 

It’ll bring a great peace in accepting that there is no life after death

இந்தநம்பிக்கையைநாத்திகம், ஆங்கிலத்தில்ஏத்தியிசம்என்பார்கள்இல்லையா?இதைச்சரிஎன்றுநினைத்துஎம்மைச்சுற்றியுள்ளவற்றைப்பார்க்கும்போதுஒருவிதஅமைதிவருகிறது. ‘ஒருபொல்லாப்பும்இல்லைஎன்றுசொல்லத்தோன்றுகிறது. ஆங்கிலத்தில்வட்ஹெக்’. நாம்எதிலாவதுவைக்கும்நம்பிக்கைகொண்டுவரும்அந்தப்பக்குவம்அபரிமிதமானது. அதுகடவுளில்வைத்தால்என்ன?கடவுள்இன்மையில்வைத்தால்என்ன? 

நண்பிஅமுதா, இவன்எப்போதுபார்த்தாலும்நாத்திகம்பேசிக்கொண்டுஇருக்கிறானே, ஒருவழிப்படுத்தவேண்டும்என்றுநினைத்து, தன்னுடையமெதடிஸ்ட்சேர்ச்சில்தொடங்கவிருந்தகிறிஸ்தவப்போதனைவகுப்பில்வந்துஇணையச்சொன்னார். சும்மாபோய்ப்பாரேன்என்றுசொல்ல, அப்படித்தான்நீங்கள்ஆரம்பிப்பீர்கள்என்றேன். ஆனாலும் என்னதான்நடக்கிறதுஎன்றுபார்க்கப்போனேன். பதினாலுஅமர்வுகள். பாலன்பிறந்ததில்ஆரம்பித்து, சிலுவையில்அறைந்தது, கட்டளைகள்எனஅந்தப்போதகருடன்உரையாடியவிடயங்கள்எல்லாமேநம்பிக்கைகள்சார்ந்தவை. போதகர்ஒருசீனஇனத்துவைத்தியர். எத்தனையோதடவைகள்அறுவைசிகிச்சைகளுக்குமுன்னர்பிரார்த்தனைசெய்திருப்பதாகச்சொன்னார். ஆச்சரியமாகஇருந்தது.

இயல்பாகநடக்கும்விடயத்தைஏன்கடவுள்என்றுபெயரிட்டுக்கொள்கிறோம்?சிலவிடயங்களுக்குஎங்களுக்குவிளக்கம்தெரியாது. அப்போதுஅதைஅற்புதம்என்றுநினைத்துமெருகூட்டி, பார்த்தவர்கள்எழுதிவைக்க, யுகங்கள்கடந்துஅவையெல்லாம்உண்மைச்சம்பவங்களாகஇன்றைக்குஉலாவுகின்றன. உதாரணமாகஇலங்கையின்மகாவம்சத்தையும், இராமன்பாலம்போன்றவிடயங்களையும்நான்அந்தப்போதகருக்குவிளக்கிக்கூறினேன். இதனால்தானோஎன்னவோதொழிற்புரட்சியின்பின்னர்கடவுள்கள்வருகை இடம்பெறவில்லைஎன்றேன். ஓரளவுக்குகடவுள்களைஇல்லைஎன்றுகண்டறியும்ஆற்றல்மனிதகுலத்துக்குவந்ததால், ‘அற்புதங்களைகாரணப்படுத்திவிளக்கமுடிவதால், இன்னொருஅவதாரமும்இறைதூதரும்நம்முள்உலவும்சாத்தியம்இல்லாமல்போயிற்றுஎன்றேன். 

அமைதியுடன்நான்சொல்வதைக்கேட்டுக்கொண்டிருந்தஅந்தப்போதகர், என்பக்கத்தில்இருந்தநபரிடம்அவர்கதையைச்சொல்லச்சொன்னார். அந்தநபருக்குப்புற்றுநோய். கல்லீரல்மாற்றுஅறுவைசிகிச்சைக்குக்காத்திருப்பவர். மனைவியும்அவரும்இறைவன்தம்மைக்கவனிப்பான்என்றநம்பிக்கையில்புத்தசமயத்தில்இருந்துகிறிஸ்தவப்போதனைக்குமாறும்எண்ணத்தில்வந்திருந்தனர். அவர்கள்கண்களில்ஒருநம்பிக்கைபளிச்சிட்டது. வெளிச்சத்தைஅணைத்துவைத்து, இயேசுவைச்சிலுவையில்அறைந்ததைவிவரித்தபோதுஅவர்களும்விக்கிவிக்கிஅழுதனர். மூன்றாம்நாள்இயேசுமீண்டும்உதித்தபோதுஅந்தநபரின்மனைவியின்கண்களில்விளக்கமுடியாதஒருநம்பிக்கை. கணவனும்மனைவியும்மெலிதாகச்சிரித்தனர். அமர்வுமுடிந்துவெளியேநடந்துபோகும்போதுபோதகர்சொன்னார், 

உன்னுடையநம்பிக்கையைநான்மதிக்கிறேன். ஒவ்வொருவருக்கும்அவரவர்மனநிலைசார்ந்துநம்பிக்கைபிறக்கிறது. வாழ்க்கையைஎல்லோராலும்சிக்கலாகஅலசமுடியாது. புரிந்துகொள்ளமுடியாது. இறைவன்இருக்கும்போதுஇந்தபுரியாமைகளுக்குஇலகுவில்விடைகிடைக்கிறது. தன்னம்பிக்கைகிடைக்கிறது. அதைத்தேடிஅவர்கள்வருகிறார்கள். அப்படிவருகிறவர்களுக்குஇறைவனும்அதைக்கொடுக்கிறார்

அதைஇறைவன்கொடுக்கவில்லை. அதுஅவர்களின்மனத்தின்விந்தைஎன்றுசொல்லஎன்வாய்உன்னினாலும்பேசாமல்திரும்பிவிட்டேன். அதற்குப்பிறகுஅந்தப்போதனைவகுப்புக்குப்போகவும்இல்லை. அமுதாவும்உன்னைத்திருத்தமுடியாதுஎன்றுவிட்டுவிட்டார். 

*****

 ஒருமுறைசிங்கப்பூர்எம்ஆர்டிநிலையத்தில்புகையிரதத்துக்காகக்காத்திருக்கிறோம். கூடநின்றசிரந்தஎன்றபௌத்தநண்பன், புத்தரின்போதனைகளைஓரளவுக்குஅறிவுப்பூர்வமாகஉணர்ச்சிவசப்படாமல்சொல்லக்கூடியவன். அவனோடுஇந்தக்கடவுள்என்றவிசயம்பற்றியபேச்சுவந்தது. 'இல்லைஎன்பதால்நீநாத்திகனாஅல்லதுஇருக்கிறதுஎன்றுதெரியாததால்நீநாத்திகனாஎன்றுகேட்டான். எப்படிக்கடவுள்இருக்கிறார்என்றுநிறுவமுடியாதோ, அதேபோலஇல்லைஎன்றும்நிறுவமுடியாதுஎன்றேன். கடவுள்என்றவார்த்தையைவரையறுப்பதேமுதலில்கடினம்என்றேன். அப்படிஎன்றால்நீஏதிஸ்ட்இல்லைஅக்னோஸ்டிக்என்றான். 

The view that there is no proof of either the existence or nonexistence of any deity, but since any deity that may exist appears unconcerned for the universe or the welfare of its inhabitants, the question is largely academic

கடவுள்இருக்கிறாராஇல்லையாஎன்பதுதேவையற்றவிவாதம். அவர்இருந்தால்நன்மையேஅதிகம்என்பதால்இருந்துவிட்டுப்போகட்டுமே?என்னகுறைந்துவிட்டது?அக்காஒருமுறை, ‘கடவுள்இல்லாமலேயேஇருக்கட்டும். வளரும்தலைமுறைக்கு, புரியாதவயதில்தார்மீகநெறிகளைப்புகட்டுவதற்குக்கடவுளும், கடவுள்மீதானபக்தியும்மிகவும்கூர்மையானவழிகள்என்றார். நீசின்னவயதில், களவெடுத்தால்கடவுள்கோபிப்பார்என்றுநம்பியதால்தானேஅதைச்செய்யவில்லை. இப்போதுவளர்ந்துஉனக்கெனத்தெளிவாகத்தார்மீகநெறிகள்வந்தபின்புகடவுள்தேவையில்லைஎன்றுசொல்வதுஎன்னநியாயம்?என்பிள்ளைக்குநான்என்னசொல்லிவளர்ப்பேன்?என்றார். 

எவ்வளவுஉண்மை?நான்படித்தஇலக்கியமும்இசையும்அந்தக்கலாச்சாரமும்நெறியும்ஆரம்பத்தில்கடவுள்சார்ந்தஅமைப்புக்களாலேயேவந்தது. அதன்ஆதாரவிடயமேகடவுள்தானே. இல்லாமல்இருக்கும்ஒருவிடயத்தைக்கடவுளாக்கிஇத்தனைநம்பிக்கையை, ஒருநாகரிகத்தையேகட்டிஎழுப்பும்மனிதக்குலத்தின்விந்தைவியக்கவைக்கிறது. அதன்தேவையைஉணர்ந்துஇயங்கிய  முன்னோர்களின்புத்திசாலித்தனத்தையும்மெச்சவேண்டும். இந்தஅமைப்பில்பலசங்கடங்கள், தவறுகள், பாரபட்சங்கள்இருக்கின்றன. மனிதன்அமைக்கும்எந்தக்கட்டமைப்பிலும்அவைஇருந்தேதீரும்கடவுள்என்றஅமைப்பேவேண்டாம்என்றுஒருமாற்றுக்கொண்டுவந்தாலும்இதேசிக்கல்கள்காலப்போக்கில்உருவாகியேதீரும்.

ஆத்திகனாகஆரம்பித்துநாத்திகனாகமாறிஅப்புறம்அக்நோஸ்டிக்என்ற  மாறுதல்களைத்திரும்பிப்பார்க்கும்போதுஆச்சரியம்தான்வருகிறது. கொள்கைகளும்நம்பிக்கைகளும்எப்போதும்மாறக்கூடியது. மாறவேண்டியது. இருபதுவயசில்உன்தேடலும்அறிவும்இன்ஸ்பிரேஷனும்உன்னைஒருகொள்கைக்குள்இழுக்கும். போகப்போகஉன்ஆளுமைகளும்சேர்ந்துஉன்தளங்கள்மாறும்போதுகொள்கைகளும்மாறும். ஒருவர்முப்பதுவருடங்களாய்மாறாமல்ஒரேகொள்கையில்விடாப்பிடியாகநின்றால், there is somethingfundamentally flawed. இந்தமாற்றம்தான்என்னைப்புதுப்பித்துக்கொண்டுஇருக்கும். எனக்குஎல்லாமேதெரிந்துவிட்டதுஎன்றஎண்ணமும், எனக்குத்தெரிந்ததுதான்சரிஎன்றஎண்ணமும்என்னைஅண்டாதவரைக்கும்நான்மாறிக்கொண்டேஇருக்கும்சாத்தியமேஅதிகம். நான்மாறமாட்டேன்என்பதுபெருமைக்குரியவிடயமேஅல்ல. பத்துவருடங்கள்கழித்தும்இந்தசேதனச்சேர்வைகுலையாமல்இருந்தால்மீண்டும்மாற்றங்களைஅலசலாம். யார்கண்டது?அப்போதுநான்யாமறியோம்பராபரமேஎன்றுஎழுதுகிறேனோதெரியாது.

கடவுளின்தேவைவாழ்க்கையில்சிக்கல்அதிகரிக்கஅதிகரிக்கஅதிகமாகிறது. இருந்தால்எவ்வளவுநன்றாகஇருக்கும்என்றஅவா. ஒருகட்டத்தில்எம்மையறியாமலேயேஇருக்கிறதுஎன்றுநம்பவைத்துவிடுகிறது. அந்தநம்பிக்கைவாழ்க்கையைக்கொண்டுநடத்தஏதுவாகிறது. லைப்ஒப்பை(Life of Pi) என்றஒருதிரைப்படம். ஆழ்கடலில்ஒருபடகில்தன்னந்தனியனாகஒருபுலி. சாப்பாடுஇல்லை. கூடஒருதுணைஇல்லை. காட்டில்வாழ்ந்தபுலிக்குஇந்தஉலகத்தைப்பற்றியோ, கடலைப்பற்றியோஎன்னஅறிவுஇருக்கப்போகிறது?ஒழுங்காகமீன்பிடிக்கக்கூடத்தெரியாது. எப்படித்தப்புவதுஎன்றுதெரியாது. செய்வதறியாதுதிகைக்கிறது. உறுமுகிறது. வேறுஎன்னசெய்வது?சுற்றிவரக்கடல். வேறுஒன்றுமேஇல்லை. கடல்கொடுக்கும்மிரட்சி, பசி, பிணி, அலை, பேரலை, மழைஎன்றுஇதுவேவாழ்க்கையாகிப்போனால்இந்தகடலில்பயணம்செய்யஎன்னதான்பிடிமானம்?அங்கேவருகிறார்கடவுள். ‘பை’. கடவுள்மீன்பிடித்துக்கொடுக்கிறார். ஆன்மபலத்தைக்கொடுக்கிறார். வாழ்க்கைஎன்றகடலைக்கடக்கஉதவுகிறார். மடியில்வைத்துத்தலைகோதிவிடுகிறார். இறுதியில்தத்தளித்துஒருவாறாகக்கரையைஅடைந்தபின்னர்கடவுள்எதற்கு?திரும்பியேபார்க்காமல்காட்டுக்குள்ஓடுகிறதுபுலி. 

அந்தப்புலிக்கும்எனக்கும்என்னவித்தியாசம்? 

எங்கள்வாழ்க்கையும்அப்படியே. இந்தக்கடலில்எங்குபோவது?எப்படிவழிஅறிவோம்?எம்மையாராவதுவழிநடத்தவேண்டும்இல்லையா?பசித்தால்சோறு, களைத்தால்தோள், அயர்ந்தால்அறிவு, என்றுஎல்லாமேகொடுத்துத்தலையைக்கோதிநம்பிக்கைகொடுக்க, வாழ்க்கைப்பயணத்தைக்கொண்டுசெல்லஎமக்கும்ஒருபைவேண்டும். அதுதான்கடவுள். அதுதான்சிவன். விஷ்ணு. அல்லா. புத்தர். இயேசு. அந்தவொலிபோல். மனிதனுக்குஅதுதேவையாகஇருக்கிறது. அருவமாக, பலசமயங்களில்உருவமாக. அதனாலேயேமனிதன்அவதாரங்களைப்பூமியில்உலவவிட்டான். நம்பிக்கையைமக்கள்மத்தியில்துளிர்விடவிட்டான். இந்தநம்பிக்கைதான்தூண். அதுஇல்லாமல்போகும்போதுகடவுளும்இல்லாமல்போகிறது. அந்தநம்பிக்கைஅருவமாகஇருக்கலாம், அம்மன்கோயில்சிலையாகவும்இருக்கலாம், அம்மாவாகஇருக்கலாம், கட்டியமனைவி, பிள்ளை, என்பையில்இருக்கும்கண்ணன்படம்எனஎதுவாகவும்இருக்கலாம். ‘நம்பிக்கைவைத்துக்கல்லையும்பார்த்தால்தெய்வத்தின்காட்சியம்மா. அதுதான்உள்ளத்தின்காட்சியம்மாஎன்பார்கண்ணதாசன். அதே.

சமீபத்தில்அக்காவுடன்சிங்கப்பூர்செண்பகவிநாயகர்கோவிலுக்குப்போகிறேன். அக்காவின்ஐந்துவயதுமகன்நான்சின்னவயதில்செய்ததுபோலவேஒவ்வொருசாமிகளையும்தொட்டுத்தொட்டுக்கும்பிடுகிறான். தனக்குள்ஏதோமுணுமுணுத்துப்பேசுகிறான். ‘மாசில்வீணையும்சுருதிபிசகவில்லை. கீழேயாரோதவறுதலாகவிழுத்திவிட்டஒருடொலர்நாணயத்தைக்கண்டெடுத்துவந்துஅம்மாவிடம்கொடுத்துஉண்டியலில்போடச்சொல்லுகிறான். பூசைமுடிந்துபஜனையில்மூளாதீப்போல்உள்ளேகனன்றுமுகத்தால்மிகவாடிபாடும்சிறுமியின்குரல்பிசிறுகிறது. பக்கத்தில்கண்ணைமூடிக்கேட்டுக்கொண்டிருக்கும்எண்பதுவயதுப்பாட்டியின்கண்ணால்கண்ணீர்வழிந்துஓடுகிறது. துடைக்கும்பிரமைகூடஇல்லாதபக்தி. 

கடவுள் ... இருந்துவிட்டுப்போகட்டும்.


*****




Viewing all articles
Browse latest Browse all 501

Trending Articles


பழம்பெரும் தயாரிப்பாளர் பஞ்சு அருணாச்சலம் காலமானார்


Sleepy Hollow (1999) Tamil Dubbed Movie HD 720p Watch Online


சித்தன் அருள் - 877 - தாவர விதி!


ஆலம்பனாவில் வைபவ் ஜோடியாக பார்வதி


நுழைவுத்தேர்வு


புழல் சிறையில் கைதி கொலை எதிரொலி : உதவி ஜெயிலர், வார்டன் சஸ்பெண்ட்


கல்லடி பட்டாலும் படலாம், கண்னடி படக்கூடாது! கண் திருஷ்டி பரிகாரங்கள்


வேலூர் மார்க்கெட்டில் வரத்து அதிகரிப்பு முலாம் பழம் கிலோ ரூ.30 க்கு விற்பனை


வட மாநிலங்களும் தவிப்பு டெல்லியில் 120 டிகிரி வெயில்: ராஜஸ்தானில்...


குழந்தை பிறந்த நேரம் எப்படி..? கண்டாந்தர நட்சத்திர தோசம்



<script src="https://jsc.adskeeper.com/r/s/rssing.com.1596347.js" async> </script>