இந்தியன் ஆர்மி யாழ்ப்பாணத்தில் நின்ற காலம். பகல் பத்து மணிக்கு தான் மின்சாரம் வரும். பதினோரு மணிக்கே பறந்திடும். இடைப்பட்ட அந்த ஒரு மணித்தியாலத்தில் தான் மோட்டர் போட்டு தண்ணி டாங்கை நிரப்பவேண்டும். உடுப்பும் அயர்ன் பண்ண வேண்டும். இரண்டையுமே ஒன்றாக செய்ய முடியாது. லோட் எகிறிவிடும். அயர்ன் பண்ணினால் மோட்டர் நின்றுவிடும். மோட்டர் போட்டால் அயர்ன்பொக்ஸின் பல்ப் எரிவதே கண்ணுக்கு தெரியாது. லைட்டை போட்டால் மங்கலாக எரியும். தண்ணி அடிச்சவனின் கண்ணைப் போல. “ஆளு பயங்கர டிம்” என்ற வசனம் அங்கிருந்து தான் வந்திருக்கவேண்டும்.
மேலும் வாசிக்க »