கோள்மூட்டி இன்னமும் ரீ… என்று ஒரே சுருதியில் வானத்தில் சுற்றிக்கொண்டு இருந்தது. வெறும் மண்ணெண்ணெய் கானோடு வீடு திரும்பிய நமசிவாயத்தை வாசல்படியில் மறித்தபடியே மருமகள் நின்றாள். “என்ன அதுக்குள்ள எண்ணை முடிஞ்சுதா?” “இல்ல கோமளா … சரியான கியூ .. நாச்சிமார் கோயிலடி வரைக்கும் போய் நிக்குது ””அதுக்கு?” நமசிவாயம் தயங்கினார். ” .. மினக்கட்டு ஒரு லீட்டர் எண்ணைக்கு போய் ரெண்டு கட்டை கியூவில நிண்டு
↧