“டொப்…” … முதல் வெடி. பின்புறமாக. உரிக்கும்போது செட்டையை படக் படக்கென்று அடிக்கும் கோழி போல கைகள் இரண்டையும் அடித்துக்கொண்டு விழுகையில், இரண்டாவது வெடி. இம்முறை முதுகில். ஒரு அடி எட்டி வைத்திருப்பான். மூன்றாவது வெடி. பிடரியில். உதயன் இறந்துவிட்டான். காகங்கள் சூட்டுச்சத்ததுக்கு வானத்துக்கு எழுந்து கரைந்தன. நிமிட நேரத்தில் அடங்கின. அக்கம் பக்கங்களில் பேச்சுச்சத்தம் மீண்டும் தொடங்கியது.
↧