தன் முயற்சியில் சற்றும் தளராத விக்கிரமாதித்தன் மீண்டும் முருங்கை மரத்தில் ஏறி, தலைகீழாக தொங்கிக்கொண்டிருந்த வேதாளத்தை இழுத்து, தன் தோளில் போட்டபடி, அடர்ந்த காட்டினூடே மௌனமாக திரும்பி நடக்கத்தொடங்கினான்.
சற்றுநேரத்தில் தோளில் தொங்கிய வேதாளம் பேசத்தொடங்கியது.
“மன்னனே … உன்னைப்பார்த்தால் திறமைசாலி போல இருக்கிறாய். ஆனால் யாருடனோ விவாதம் செய்து தோற்றுப்போய், இந்த தேவையில்லாத வேலையை செய்துகொண்டிருக்கிறாய் என்று தோன்றுகிறது. அப்படியே நீ என்னைக் கூட்டிக்கொண்டு போய்விட்டாலும், அவர்கள் கதையை மாற்றி மீண்டும் உன்னை தோற்கடிக்கவே பார்ப்பார்கள். சுதந்திரபுரம் என்ற ஊரில் வாழ்ந்த சகுந்தலா போன்று விவாதம் செய்திருந்தாயானால் உனக்கு இந்த நிலை வந்திருக்காது. … அவளின் கதையைக் கேள் சொல்கிறேன்..”
என்று வேதாளம் தன் கதையை சொல்ல ஆரம்பித்தது.
மேலும் வாசிக்க »